
கடந்த ஆறு நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 270 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், நேற்று (15) அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகளிடமிருந்து 48 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை செயல்பாட்டு பராமரிப்பு மற்றும் மேலாண்மைப் பிரிவின் இயக்குநர் ஆர்.ஏ.டி. கஹடபிட்டிய தெரிவித்துள்ளார்.
கடந்த ஆறு நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்திய மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 787,000 எனப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள், அதிவேக நெடுஞ்சாலைகளுக்குள் ஏதேனும் அவசரநிலைகள் ஏற்பட்டால் ‘1969’ என்ற துரித இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார்.