
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு விநியோகம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது..அதன்படி, ஏப்ரல் 27 ஆம் திகதி வாக்குச் சீட்டு விநியோகத்திற்கான விசேட நாளாக நியமிக்கப்பட்டுள்ளதுடன் ஏப்ரல் 29 ஆம் திகதிக்குள் வாக்குச்சீட்டு விநியோகங்கள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தபால் மா அதிபர் ருவான் சத்குமார தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், தபால் வாக்களிப்புக்கான வாக்குச் சீட்டு விநியோகம் ஏப்ரல் 21 ஆம் திகதிக்குள் நிறைவடையும் என்று தேர்தல் ஆணைக்குழு உறுதிப்படுத்தியது