
ஊழல் குற்றச்சாற்று இல்லாத அரச தரப்பை வெற்றிபெறச் செய்து அபிவிருத்தி அடைந்த ஊராக பேருவளையை மாற்றுவோம் – தேசிய மக்கள் சக்தியின் நகராதிபதி வேட்பாளர் மபாசிம்2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பேருவளை நகரசபை அதிகாரத்தை அரச தரப்பான தேசிய மக்கள் சக்திக்கு வழங்கி ஊரின் அபிவிருத்திப்பணிக்கு பழைய கட்சிபேதம் மறந்து ஒன்றிணைவோம் என NPP முதன்மை வேட்பாளராக போட்டியிடும் மொஹமத் மபாசிம் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார் .
மேலும் தெரிவித்த அவர் , வரலாற்றில் முதற்தடவையாக ஊழல் குற்றச்சாட்டு இல்லாத கட்சியை அரசாங்கமாக தேர்ந்தெடுத்து அதிகாரத்தை வழங்கிய நாம் , எமது ஊரின் அதிகாரத்தையும் அரசுக்கே வழங்கி ஊர் பிரச்சினைகளை தீர்த்து பேருவளையை அபிவிருத்தியடைந்த ஊராக மாற்றுவதற்கு நாம் ஒன்றிணைவோம்.
எமது மத்திய அரசின் , அங்கீகாரத்துடன் பேருவளையில் முக்கிய பல அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கு நாம் தயாராகி உள்ளோம்.
குறிப்பாக , பேருவளை நல்லஹென ஆதார வைத்தியசாலையை நவீன வசதிகளுடன் விஸ்தரித்தல் , பேருவளை கடற்கரையை இரவு வெளைகளிலும் இளைப்பாறும் அழகிய பகுதியாக மாற்றுதல், தொடர்ந்தும் நிலவி வரும் குப்பை பிரச்சினைக்கு , மீழ்சுலட்சி முறையில் நிரந்தர தீர்வை வழங்குதல் என பலதரப்பட்ட திட்டங்களை மேற்கொள்ள தயாராகி உள்ளோம் எனத் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர் , தோல்வியின் பகிரங்க வெளிப்பாட்டில் எதிர்கட்சிகள் வங்குரோத்து அரசியல் செய்வதாக குற்றம்சாட்டியதோடு.
எதிர்வரும் மே மாதம் ஆறாம் திகதி பேருவளை நகரசபை அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றிய பின் பேருவளை நகரசபை தலைவராக முஹம்மத் மபாசிம் ஆகிய நான் பொறுப்பேற்று ,ஊரின் அபிவிருத்திக்கு சேவையற்றுவே எனவும் உறுதி செய்தார்.