கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டி மெல் மாவத்தை செயின்ட் மைக்கேல் சுற்றுவட்டத்திலிருந்து அலரிமாளிகையை ஒட்டிய ரொட்டுண்டா சுற்றுவட்டம் வரையிலான பகுதி பாதுகாப்பு காரணங்களுக்காக 2005 இல் மூடப்பட்டது.

19 வருடங்களின் பின்னர், பாதுகாப்பு அமைச்சின் தலையீட்டினால் இந்த வீதி நேற்று (04) பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. வீதி சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் ஒரு திசையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும்.

பழுதுபார்க்கும் பணிகள் முடிவடைந்தவுடன், இரு பாதைகளிலும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *