
கடந்த 2015 ஆம் ஆண்டு தர்மராஜா கார்த்திகா கொலை செய்யப்பட்ட வழக்கில், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெண்டிக, பெட்ரிக் கிருஷ்ணராஜா என்ற நபருக்கு மரண தண்டனை விதித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி பெஸ்டியன் மாவத்தையிலுள்ள தனியார் பஸ் தரிப்பிடத்தில் பயணப்பொதி ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டதுகுறித்த குற்றச் செயலை மேற்கொண்ட பெட்ரிக் கிருஸ்ணராஜா என்ற நபர் இவ்வாறு பெண்ணின் உடலை பயணப்பொதியொன்றில் சூட்சுமமாக மறைத்து பெஸ்டியன் மாவத்தையிலுள்ள தனியார் பஸ் தரிப்பிடத்தில் வைத்துச் சென்றுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த நபருக்கு எதிரான வழக்கு 10 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் குறித்த வழக்கு இன்று (24)மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெண்டிக முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த நபருக்கு எதிரான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
தீர்ப்பை வழங்குவதில், நீதிபதி படபெண்டிக, கிருஷ்ணராஜாவுக்கு எதிரான ஆதாரங்கள் அதிகமாக இருப்பதாகவும், மரண தண்டனையை நியாயப்படுத்துவதாகவும் கூறினார்