வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் இன்று(12) மட்டக்களப்பு சிறையில் இருந்து பல கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, 14 ஆண் கைதிகளும் ஒரு பெண் கைதியுமாக 15 கைதிகளும் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்படும் நிகழ்வில் பிரதம சிறை பொறுப்பதிகாரி உள்ளிட்ட சிறைச்சாலையின் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

சிறு குற்றம் புரிந்த, தண்டப் பணம் செலுத்தாத கைதிகள் 388 பேர் இன்றைய தினம் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படடுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *