
முப்பது சதவீத மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கும் முயற்சிகளை உடனடியாக நிறுத்துமாறு முன்னணி சோசலிசக் கட்சியின் செயலாளர் குமார் குணரட்னம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, மின்சாரக் கட்டணம் இந்த முறையில் அதிகரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நேரத்தில் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டால், அவர்கள் சிரமத்திற்குள்ளாக நேரிடும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.