
ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் கோரிக்கைகளுக்கு அமைச்சு மட்டத்தில் தீர்வுகள் வழங்கப்பட்ட போதிலும், பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவது குறித்து போக்குவரத்து அமைச்சு அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வேலைநிறுத்தங்களுக்குப் பின்னால் வேறு ஏதேனும் நோக்கம் உள்ளதா என்ற சந்தேகம் எழுந்தாலும், ரயில்வே சேவையைப் பராமரிக்க அனைத்து சாத்தியமான தலையீடுகளும் செய்யப்படும் என்று அமைச்சு அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது.