
கல்கிஸ்ஸை காலி வீதிக்கு அருகில் இளைஞன் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் பன்னிப்பிட்டியவில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸின் குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தில் இறந்தவர் தெஹிவளை, ஓபன் பிளேஸில் வசிக்கும் 19 வயது இளைஞன் பிரவீன் நிசங்க ஆவார்.
அவர் கல்கிஸ்ஸை நகரசபை திடக்கழிவுத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர், துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் வீட்டின் பின்னால் புதைக்கப்பட்ட நிலையில், துண்டு துண்டாகக் கிடந்ததை பொலிஸார் கண்டுபிடித்தனர்.