நாட்டின் சில பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், நான்கு மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளுக்கு தேசிய கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று (07) காலை 9.30 மணி முதல் நாளை இரவு 9.30 மணி வரை அமுலில் இருக்கும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதன்படி, காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு 2 ஆம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலி, நாகொட மற்றும் எல்பிட்டிய பிரதேச செயலக பிரிவுகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் களுத்துறை, வலல்லாவிட்ட மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், காலி, நியகம மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் கேகாலை, தெஹியோவிட்ட மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மாத்தறை, பிடபெத்தர மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் முதலாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது