அமைச்சரவை அங்கீகாரத்துக்கமைய மேற்கொள்ளப்பட்ட நியமனங்களை இரத்துச் செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.அமைச்சரவை அங்கீகாரத்துக்கமைய ஜனாதிபதி செயலகத்தின் கீழ் “வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் விவகார செயலகம்”, “பங்கேற்பு ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்கான மக்கள் சபை முறையை நிறுவுவதற்கான தேசிய மக்கள் சபை செயலகம்” மற்றும் “விவசாய நவீனமயப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டம்” ஆகியவற்றை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக ஒப்பந்த அடிப்படையில் அலுவலர்கள் / ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்குறித்த அலுவலகங்கள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்கள் மூலம் எதிர்பார்க்கப்படும் கருமங்களை தொடர்புடைய அமைச்சுக்கள் ஊடாக அமுல்படுத்தவதற்கான இயலுமை இருப்பதனால், அதற்காக ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் / ஆலோசகர்களின் 3 சேவையை 2024-09-30 திகதியிலிருந்து அமுலாகும் வகையில் முடிவுறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி அமைச்சரவையை தெளிவுபடுத்திய பின்னர், அமைச்சரவை அதற்கான ஒப்புதலை வழங்கியது.