முட்டை ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்ட போதிலும், பல இடங்களில் அதே விலையில் முட்டைகளை கொள்வனவு செய்ய முடியாதுள்ளதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர்.
அதன்படி, 20 முதல் 30 ரூபா வரை குறைந்திருந்த முட்டை ஒன்றின் விலை மீண்டும் 40 ரூபாவிற்கு மேல் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சில பகுதிகளில் முட்டையின் விலை கிட்டத்தட்ட 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.