எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பமாகவுள்ளது.
தபால் மூலம் வாக்களிக்க முடியாத அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் ஒக்டோபர் 18 ஆம் திகதி மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்படும் என உதவி மாவட்ட தேர்தல் ஆணையாளர் டபிள்யூ.எச்.ஆர்.விஜயகுமார தெரிவித்தார்.
எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கு 8 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஒரு சுயேச்சைக் குழுவும் வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளன