சீரற்ற காலநிலை காரணமாக அவசர நிலை ஏற்படும் பட்சத்தில் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக விமானப் படையினரை பயன்படுத்துவதற்கு விமானப்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, நாட்டில் ஏதேனும் அனர்த்தங்கள் ஏற்பட்டால் தொடர்ச்சியாக கண்காணிப்பதற்காக விமானப்படையின் கண்காணிப்பு விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளதுடன், மக்களுக்கு நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக மூன்று ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
ரத்மலானை விமானப்படை தளத்தில் ‘பெல்-412’ ரக ஹெலிகொப்டர் ஒன்றும், ஹிங்குராக்கொட விமானப்படை தளம் மற்றும் பலாலி விமானப்படை தளம் ஆகியவற்றில் இருந்து இரண்டு ‘பெல்-212’ ரக ஹெலிகொப்டர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
மீட்புப் பணிகளுக்காக சிறப்புப் பயிற்சி பெற்ற விமானப் படைப்பிரிவின் சிறப்புப் படை வீரர்களும் அந்த முகாம்களில் தயார்படுத்தப்பட்டுள்ளனர்.