முன்னாள் அமைச்சரின் உறவினரிடம் இருந்து இரண்டு சொகுசு வாகனங்கள் கண்டி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் அனிவத்தை பகுதியில் உள்ள உறவினரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 60 மில்லியன் ரூபா பெறுமதியான BMW கார் ஒன்றும் மற்றும் SUV சொகுசு கார் ஒன்றும் கண்டி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கண்டி குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த குழுவொன்று ரோஹித அபேகுணவர்தனவின் உறவினரின் வீட்டிலுள்ள வாகன தரிப்பிடத்தை பரிசோதித்த போது மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு வாகனங்களையும் கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த வாகனங்கள் தொடர்பாக வீட்டில் உள்ள எவரும் சட்டப்பூர்வ உரிமை கோர முடியாததால், இரண்டு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
வீட்டின் உரிமையாளர் கண்டி, மஹாயாவ பகுதியில் கார் விற்பனையை நடத்தி வருவதுடன், ரோஹித அபேகுணவர்தன துறைமுக அமைச்சராக இருந்த காலத்தில் இலங்கை துறைமுக அதிகார சபையில் உயர் அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்
.இந்த இரண்டு வாகனங்களும் சட்டவிரோதமான முறையில் துறைமுகத்திற்கு வெளியே கொண்டு வரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும், இந்த இரண்டு சொகுசு வாகனங்களும் அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளன