நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலை திருத்தத்திற்கு சமாந்தரமாக லங்கா IOC நிறுவனமும் எரிபொருட்களின் விலைகளில் திருத்தத்தினை மேற்கொண்டது.
அதன்படி, இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் 95 லீற்றர் பெற்றோல் 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 371 ரூபாவாகும்.
மேலும், லங்கா சுப்பர் டீசலின் விலை லீற்றர் ஒன்றிற்கு 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 319 ரூபாவாகும்.
மண்ணெண்ணெய், ஒட்டோ டீசல் மற்றும் ஒக்டேன் 95 லீற்றர் பெற்றோலின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என லங்கா IOC நிறுவனம் தெரிவித்துள்ளது தெரிவித்துள்ளது.