இலங்கையில் வங்கிகளால் அமுல்படுத்தப்பட்ட “பராட்டே சட்டம்” காரணமாக கடந்த ஆண்டு ஆரம்பத்தில் 127 வர்த்தகர்கள் தற்கொலை செய்துகொண்டதாக மாவட்ட ஒன்றிணைந்த தொழில்முனைவோர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தச் சட்டத்தினால் இந்நாட்டிலுள்ள சுமார் 04 இலட்சம் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், பலர் வணிக வளாகங்கள் மற்றும் வசிப்பிடங்களை இழந்துள்ளதாகவும் அச்சங்கத்தின் தலைவர் சம்லி குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பராட்டே சட்டத்தின் கீழ் சொத்துக்களை இழந்த சுமார் 127 பேர் கடந்த ஆண்டு ஆரம்பத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

பராட்டே சட்டத்தின் கீழ் வங்கிகளில் இருந்து எங்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. இது தொடர்பில் தற்போதைய அரசாங்கத்துடன் சில கலந்துரையாடல்களை நடத்தினோம்.

பராட்டே சட்டம் டிசம்பர் 15வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு மீண்டும் அமுலுக்கு வரும்.­­­

அப்போது 127 தற்கொலைகள் 200 இலிருந்து 300ஆக அதிகரிக்கும். பராட்டே சட்டம் இடைநிறுத்தப்பட்டவுடன் தொழில்முனைவோருக்கு எந்த வழியும் இல்லை.

தொழில்முனைவோருக்கு உதவும் வகையில் நாட்டில் வணிகத்தை உருவாக்கும் திட்டம் எதுவும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *