காலி மாவட்ட முன்னாள் அமைச்சர் ஒருவரினால் நேற்று (07) இரவு ஹபராதுவ பிரதேசத்தில் உள்ள விழா மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசியல் கட்சி கூட்டம் காலி மாவட்ட தேர்தல் சர்ச்சை தீர்வு நிலைய அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது.
இக்கூட்டத்துக்கு மாவட்டத்தின் அனைத்து மாகாணங்களிலிருந்தும் ஐந்து பேரூந்துகளில் சுமார் 500 பேர் அழைத்து வரப்பட்டுட்டிருந்தனர்.
இதன் போது அங்கு வருகை தந்த அதிகாரிகள் விழா மண்டபத்தில் தயாரிக்கப்பட்ட உணவு மற்றும் பானங்கள் கையகப்படுத்தி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஹபராது பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதியிடம் ஒப்படைத்தனர்.
நிகழ்ச்சி அரங்குகள் மற்றும் ஹோட்டல்களில் கூட்டங்களை நடத்தலாம், ஆனால் மது விருந்துகளை நடத்த முடியாது என தேர்தல் தகராறு தீர்வு மையம் தெரிவித்துள்ளது.