புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை, இன்று (18) முற்பகல் 10.00 மணிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளது.
அதன்படி, அனைத்து அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சுகளை ஜனாதிபதி அநுர தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பார் என சொல்லப்பட்டது.
வெளிநாட்டமைச்சுப் பொறுப்பை விஜித ஹேரத்திடம் வைத்திருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
விவசாய அமைச்சை லால்காந்தவிடமும் சுகாதார அமைச்சுப் பொறுப்பை டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸவிடமும் ஒப்படைக்க நேற்றிரவு ஆலோசனை நடத்தப்பட்டது.
கல்வி மற்றும் சுகாதார பிரதியமைச்சுப் பொறுப்புகளில் தமிழர்கள் இருவரை நியமிக்க பேசப்பட்டிருந்தது.
பெருந்தோட்ட பகுதி அபிவிருத்தி அமைச்சுப் பொறுப்பை இராமலிங்கம் சந்திரசேகரனிடமும் கைத்தொழில் அமைச்சை சுனில் ஹந்துன்நெத்தியிடமும் வழங்குவதற்கு ஆராயப்பட்டது.
பிமல் ரத்னாயக்கவை சபாநாயகர் அல்லது சபை முதல்வராக நியமிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் பதவியை ஹரிணி தொடர்வாரென்றும் பாராளுமன்றத்துக்கு தென்னிலங்கையில் இருந்து தெரிவாகிய சரோஜா போல்ராஜ் அமைச்சர் பதவியொன்றை பெறுவாரென்றும் நேற்றிரவு அறியமுடிந்தது.
பாதுகாப்பு, நிதி ஜனாதிபதி வசம்
வெளிநாடு விஜித ஹேரத்
விவசாயம் லால்காந்த
சுகாதாரம் நளிந்த ஜெயதிஸ்ஸ
கைத்தொழில் சுனில் ஹந்துன்நெத்தி
பெருந்தோட்டம் சந்திரசேகரன்