வடக்கிற்கு எதிரான தெற்கின் அரசியலும், தெற்கிற்கு எதிரான வடக்கின் அரசியலும் இருந்த போதிலும், பிரிவினை அரசியல் இனியும் தேவையில்லை என்பதை இத்தேர்தல் நிரூபித்துள்ளது.
பிரஜைகளுக்கு பகுதியளவு சுதந்திரத்தை வழங்க தாம் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையின் பதவிப்பிரமாண நிகழ்வு இன்றையதினம் (18) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது அமைச்சர்களின் பதவிப் பிரமாணத்தை தொடர்ந்து ஜனாதிபதி உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, பொதுமக்களின் எதிர்ப்பார்ப்புக்களையும் அபிலாஷைகளையும் நிறைவேற்றுவதே அரசாங்கம் பொறுப்பாகும்.
அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வரம்பற்ற அதிகாரத்தை பொறுப்புடன் கையாள வேண்டும்.
மக்களின் கடின உழைப்பு மற்றும் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் வெற்றியடையச் செய்யும் வகையில் நல்லாட்சி இருக்க வேண்டும்.
ஊழல் அற்ற ஆட்சியை முன்னெடுப்பதே எமது நோக்கமாகும். நாட்டில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பெரும்பான்மை அதிகாரம் ஆட்சியாளர்களுக்கு கிடைத்தது.
அதிகாரத்தின் ஊடாக மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். மக்கள் வழங்கியுள்ள அதிகாரமானது பொறுப்பு வாய்ந்தது. மக்களுக்கும் பொறுப்பு உள்ளது.
எந்தவொரு அதிகாரம் வழங்கப்பட்டாலும் அதில் பொறுப்புடன் செயற்பட வேண்டியுள்ளது. அத்துடன் பல புதியவர்கள் இம்முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு தொழில்சார்ந்தவர்களை மக்கள் தெரிவு செய்துள்ளார்.
மக்களின் எதிர்ப்பார்ப்புக்களை பூர்த்தி செய்யக்கூடியவர்கள் என்ற நம்பிக்கையுடனேயே மக்கள் அவர்களை தெரிவுசெய்துள்ளனர். “வெற்றி பெரியது, அந்த வெற்றிக்காக நம் மீது சுமத்தப்பட்ட பொறுப்புகள் சமமானவை.”
பிரிவினை அரசியல் இனியும் தேவையில்லை என்பதை இத்தேர்தல் நிரூபித்துள்ளது.
தேசிய மக்கள் சக்திக்கு வலுவான மக்கள் ஆணையை வழங்க முயற்சித்த அனைத்து மக்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
தேசிய மக்கள் சக்தியின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு அனைத்து மக்களின் ஆதரவும் தேவை என தெரிவித்த ஜனாதிபதி, தோற்றவர்களை காயப்படுத்திய வரலாற்றை மாற்றி புதிய அரசியல் கலாசாரத்தை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இத்தேர்தலில் கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் சமூக ஊடக செயற்பாட்டாளர்களாக முன்வந்து செயற்பட்ட இளம் சமூகம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
அவர்களுக்கு நன்றி. மேலும் இந்தத் தேர்தலில் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் எழுந்து நின்றதாகவும், அவர்கள் அனுபவிக்கும் அடக்குமுறையே இதற்குக் காரணம். இந்தத் தேர்தல் முடிவு அவர்களின் சுதந்திர பேச்சு எனவும் தெரிவித்துள்ளார்.
எனவே, பிரஜைகளுக்கு பகுதியளவு சுதந்திரத்தை வழங்க தாம் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. இதன்பின்னர் நாம் வெற்றிகரமான முறையில் அனைத்து வேலைத்திட்டங்களையும் முன்னெடுப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளோம். இலங்கையை மறுமலர்ச்சி யுகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார்.