
மண்சரிவு மற்றும் பாறை சரிவு காரணமாக மலையக ரயில் சேவையில் மேலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு கோட்டையிலிருந்து நானுஓயா வரையிலான மலையகப் பாதையில் நான்காவது நாளாக ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
இதேவேளை, நேற்று (28) கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையில் இயங்கும் இரவு தபால் ரயில் கொழும்பு கோட்டையில் இருந்து பண்டாரவளை வரை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கட்டுப்பாட்டு அறை மேலும் தெரிவித்துள்ளது