சீரற்ற காலநிலையால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தினால் அழிவடைந்த அரிசி, கோதுமை, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், மிளகாய், சோயா பீன்ஸ் செய்கையாளர்களுக்கு ஒவ்வொரு ஏக்கருக்கும் அதிகபட்சமாக 40,000 ரூபா நட்டஈடு வழங்கப்படும் என விவசாய பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என விவசாயத்துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் சீரற்ற காலநிலையால் பெரும்போக விவசாயத்தில் 4,800 ஏக்கர் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், 3,900 ஏக்கர் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

விவசாயத்துறை அமைச்சின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மதிப்பீடுகளின் பின்னர் நிவாரணம் வழங்கப்படும் என்றார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *