இலங்கை துறைமுக அதிகார சபையின் முன்மொழியப்பட்ட காலி துறைமுக அபிவிருத்தித் திட்டம் ருமஸ்ஸலா (Rumassala Marine Sanctuary) கடல்சார் சரணாலயத்தில் உள்ள பவளப்பாறைகளை மோசமாக பாதிக்கும் என்று 500 பக்க துணை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தெரிவித்துள்ளது.

பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலா ரியல் எஸ்டேட் முதலீடுகளுக்காக 44.97 ஹெக்டேர் நிலத்துடன் முழுமையான சுற்றுலா துறைமுகத்தை உருவாக்குதே, காலி துறைமுக அபிவிருத்தி திட்டத்தின் நோக்கமாகும்.

கொழும்பு போர்ட் சிட்டியை போன்று பயணிகள் கப்பல்கள் மற்றும் சூப்பர் படகுகளுக்கான 150 மீட்டர் இடம் மற்றும் அதிநவீன கப்பல் முனையம் ஆகியவை இந்த திட்டத்தில் அடங்குகின்றன.

உலகப் புகழ்பெற்ற சேர்ஃபிங் இடமான தேவாடா (Dewata ) கடற்கரையில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இதற்காக, 1.9 மில்லியன் மெட்ரிக் டன் நிரப்பு பொருட்கள் தேவைப்படும்.பொது மற்றும் தனியார் கூட்டு மூலம் நிதியளிக்கப்படும், இலங்கை துறைமுக அதிகாரசபையின் இது தொடர்பான முன்மொழிவு இப்போது பொதுமக்களின் கருத்துக்காக முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில்;, பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் திட்டத்தினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறைக்கப்படலாம் என்று துணை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தெரிவித்துள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *