
கால்நடைகளுக்கு உணவு விநியோகம் செய்த உழவு இயந்திரம் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அம்பேவெல பிரதேசத்தில் வசிக்கும் 55 வயதுடைய பண்ணை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் பண்ணையில் வேலை செய்து கொண்டிருக்கும் போது கால்நடைகளுக்கு உணவு விநியோகம் செய்த உழவு இயந்திரம் மோதியதில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சடலம் நுவரெலியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் உழவு இயந்திர சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.