நடப்பாண்டின் ஜனவரி 1 முதல் டிசம்பர் 13, 2024 வரை வீதி விபத்துகளில் 2,243 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தக் காலகட்டத்தில் மொத்தம் 22,967 வீதி விபத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இதில் 2,141 மரண விபத்துகள் அடங்கும்.

இது அனைத்துச் சம்பவங்களில் 9% ஆகுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 6,500 கடுமையான விபத்துகளும் 9,127 சிறு விபத்துகளும் பதிவாகியுள்ளன.

இதேவேளை, நேற்று இடம்பெற்ற வீதி விபத்துகளில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 56 பேர் காயமடைந்துள்ளனர்.

ஹட்டன், மல்லியப்பு பகுதியில் பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர். 46 பேர் காயமடைந்துள்ளனர்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பத்தேகமவுக்கும் பின்னதுவைக்குமிடையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், வேனும் லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

கடுகண்ணாவையில் பஸ் ஒன்று மரத்தில் மோதியதில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

குறிப்பாக, பண்டிகைக் காலங்களில் விபத்துகளைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *