இலங்கை முதல் முஸ்லிம் பெண்கள் பாடசாலை பேருவளை மருதானை அல்-பாஸியத்துல் நஸ்ரியா முஸ்லிம் மகளிர் கல்லூரி நூற்றாண்டு விழா காண்கிறது.

1924 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையின் நூற்றாண்டு நிறைவு விழா நாளை 24 ஆம் திகதி (2024-12-24) செவ்வாய்க்கிழமை வெகு விமர்சையாய் கொண்டாடப்படவுள்ளது.

கல்லூரி அதிபர் திருமதி. மஸ்னவியா மூஸின் அவர்களது தலைமையில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், SDEC, OGA, பெற்றோர், ஊர் நலன் விரும்பிகள் அனைவரினதும் பங்களிப்புடன் நடைபெறும். இவ்விழாவில் அதிதிகளாக, மேல் மாகாண கல்வி அதிகாரிகளும், களுத்துறை கல்வி வலய அதிகாரிகளும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு பாடசாலையில் பல நிகழ்வுகள் நடந்தேறின.

அந்த வகையில் பாடசாலையின் நூற்றாண்டின் சின்னம் வெளியீட்டு நிகழ்வு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

அந் நிகழ்வில் பாடசாலையின் வளர்ச்சிக்கும், புகழுக்கும் ஒத்தாசை புரிந்த முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் சிறப்பான முறையில் கெளரவிக்கப்பட்டனர்.

நூற்றாண்டு நிறைவு நினைவு கூறுமுகமாக பாடசாலையின் நிகழ் படம் தாங்கிய முதல் நாள் முத்திரை உறை வெளியீட்டு நிகழ்வு, அத்துடன் முன்னாள் தபால்-துறை அமைச்சர் பந்துல குணவர்தனவின் பிரசன்னத்துடன் விமர்சையாக நடைபெற்றது.

இவ் வைபவம் பாடசாலையின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பதிக்கப்பட வேண்டிய நிகழ்வாகும். இவற்றை தொடரந்து பாடசாலையில் களியாட்ட நிகழ்வு கோலாகலமாய் மூன்று நாட்கள் இடம்பெற்றது.

மேலும் பாடசாலை வளாகத்தில் பல்பொருள் சிறப்பாங்காடி இடம்பெற்றது.

இவ்வாறான வைபவங்கள், பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பாடசாலை பழைய மாணவிகள் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என அனைவரினதும் ஒத்துழைப்போடு வெகு விமர்சையாக இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவற்றை தொடர்ந்தே 2024-12-24 நாளை அன்று நூற்றாண்டு விழா வெகு விமர்சையாக நடைபெற இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *