
ஜா-எல சாந்த ஹானா பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று (24) அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் குறித்த வீட்டின் கேட் மற்றும் சுவர்கள் சேதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பான விசாரணையை ஜாஎல பொலிசார் ஆரம்பித்துள்ளனர்