Prionailurus viverrinus என்கின்ற மீன்பிடிப் பூனை (Fishing cat) இனத்தை சேர்ந்ததென நம்பப்படும் அரிய வகைப் புலியின் உடல் இன்று மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோட்டைக் கல்லாற்றில் இறந்த நிலையில் மீட்கப்பட்டள்ளது.

மீன்பிடி பூனை(அரிய வகை புலி) என அழைக்கப்படுவதுடன் மக்கள் வாழும் பகுதியில் இவ்வாறான அரிய வகை புலிகள் காடுகளில் இருந்து உள் நுழைந்து மீன் உட்பட கிராம வாசிகளின் வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி வந்த நிலையில் இவ்வாறு சிக்கி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோட்டைக்கல்லாறு பிரதான வீதியில் மீட்கப்பட்டுள்ள சுமார் 3 அடி நீளமான புலியின் சடலம் விபத்து சம்பவத்தினால் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதா அல்லது யாராவது தாக்கி கொல்லப்பட்டதா என்ற விசாரணைகளை வன வனஜீவராசி திணைக்களமும் பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

காட்டுப் பூனை என அழைக்கப்படும் இப்புலியை சுற்றி மல்லிகைப் பூக்கள் தூவப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

அண்மைக்காலமாக அப்பகுதியில் உள்ள கோழிகளை வேட்டையாடி வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளதுடன் இதே போன்று அண்மையில் கோட்டைக்கல்லாற்று பாலம் அருகிலும் புலியின் சடலம் ஒன்றும் மீட்கப்பட்டதாக குறிப்பிட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *