
லொஸ் ஏஞ்சல்ஸில் காட்டுத்தீயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளதுடன் காட்டுத்தீ பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என அந்நாட்டு வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லொஸ் ஏஞ்சலஸ் நகரில் கடந்த 7ஆம் திகதி காட்டுத் தீ ஏற்பட்டது. இதனால் பொலிசேட்ஸ், ஈட்டன், அல்டாடெனா ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதுடன் வரும் நாட்களில் நிலைமை மோசமடையும் எனவும் மணிக்கு 110 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.இந்நிலையில், தொடர்ந்து பரவி வரும் காட்டுத்தீயால் தற்போது பலி எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளதுடன் இதுவரை 15 சதவீதம் தீ மட்டுமே கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருப்பதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.மேலும், காட்டுத்தீயை அணைக்கும் பணியில் நூற்றுக்கணக்கான விமானங்கள், ஹெலிகொப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.