
ஏறாவூர் மக்காமடி குறுக்கு வீதியில் கிணற்றில் தவறி வீழ்ந்து 2 வயதான பெண் குழந்தை உயிரிழந்துள்ளது.
வீட்டில் தாயுடன் இருந்த முகம்மது சாஜித் மெஹ்ரிஸ் அய்ரா எனும்2 வயதான பெண் குழந்தை வெளியில் விளையாடிக் கொண்டிருந்த தருணம் கிணற்றுக்கு அருகில் இருந்த கதிரையில் ஏறி கிணற்றினுள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அயலவர்களின் துணையுடன் உயிரிழந்த நிலையில் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையின் சடலம் ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், ஏறாவூர் பொலிஸாரின் விசாரணைகளை அடுத்து பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நசீர் அவர்களினால் மரண விசாரணை நடத்தப்பட்டு கிணற்று நீரில் வீழ்ந்து ஏற்பட்ட விபத்து மரணம் என உறுதி செய்யப்பட்ட பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது .