2023-2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரியை செலுத்தி முடிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் முடிவடைவதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் இன்று வரை அனைத்து வருமான வரிகளையும் செலுத்தி முடிக்க திணைக்களம் அவகாசம் வழங்கியுள்ளதுடன், உத்தரவை மீறும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.வரி செலுத்தத் தவறினால், சட்டப்படி வருமான வரி செலுத்தாமல் அல்லது தாமதமாகச் செலுத்தியதற்காக அபராத வட்டி விதிக்கப்படும் என்றும், அபராதம் அல்லது வட்டி குறைக்கப்பட மாட்டாது என்றும் அவர் தெரிவித்தனர்.

மேலும், நிலுவையில் உள்ள வரிகள் இருப்பின் அவற்றை அடுத்த மாதம் 30ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *