
எதிர்வரும் பெரும்போக நெல் கொள்வனவு நடவடிக்கைகளில் முப்படையினரின் ஒத்தாசைகளைப் பெற்றுக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன் பிரகாரம் நெல் களஞ்சியப்படுத்தப்படவுள்ள நெல் கொள்வனவு சபை மற்றும் சதொச நிறுவனத்தின் களஞ்சியசாலைகளை புனரமைக்கும் பணிகளில் முப்படையினரின் மனித வளம் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.
தற்போதைக்கு நெல் கொள்வனவு சபையின் 209 களஞ்சியசாலைகள் மற்றும் சதொச நிறுவனத்துக்குச் சொந்தமான 02 களஞ்சியசாலைகள் என்பன கொள்வனவு செய்யப்படும் நெல்லைக் களஞ்சியப்படுத்த தெரிவு செய்யப்பட்டுள்ளன.
அவற்றின் புனரமைப்பு பணிகளை இம்மாத இறுதிக்குள் பூர்த்தி செய்து, கமத் தொழில் அமைச்சுக்கு பாதுகாப்பு அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது.