
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று (21) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் அளிக்க சென்றுள்ளார்.
தென் கொரிய வேலைவாய்ப்பு சம்பவம் தொடர்பாக மனுஷ நாணயக்கார வாக்குமூலம் அளிக்கத் தயாராக இருப்பதாக அவரது வழக்கறிஞர் நேற்று (20) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அளித்த தகவலின்படி இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்படுவதற்கு முன்னர், முன்பிணையில் விடுவிக்கக் கோரி மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த முன்பிணை மனு, கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.