
கறுவாத் தோட்டத்தின் தர்மபால மாவத்தை பகுதியில் 1 கிலோகிராம் 190 கிராம் ஐஸ் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று (31) கைது செய்யப்பட்டதாக கறுவாத் தோட்டப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் பொரளை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கறுவாத்தோட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.