
நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இல்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் இன்று (02) தொடர்ந்து நடைபெறும் எனவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாட்டில் எரிப்பொருள் பற்றாக்குறை பிரச்சினை இருக்காது எனவும் எரிபொருள் விநியோகத்திற்காக பெற்றோலிய விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் 3% கொடுப்பனவு நேற்று முதல் இரத்து செய்ய இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.