
பொலன்னறுவையில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவன் ஒருவரை தாக்கி அவரது ஒரு காதை காயப்படுத்திய அதே பாடசாலை அதிபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த அதிபர் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவன் 17 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மாணவனால் பொலிஸாரிடம் முறைப்பாடளிக்கப்பட்டதைத் தொடர்ந்தே அப்பாடசாலையின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவன் தலைமுடி வெட்டவில்லை என்பதாலும் கருப்பு நிற காலுறை அணிந்து வந்ததாலும் அதிபர் அவரை தாக்கியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.