
25 ஆவது ஆண்டு பூர்த்தியைக் கொண்டாடும் மக்கொன அஹதியா பாடாலையின் வருடாந்த இப்தார் நிகழ்வு!!
2025ஆம் ஆண்டு தமது 25ஆவது வருட பூர்த்தியைக் கொண்டாடுகினற மக்கொனை அஹதிய்யாப் பாடசாலை இங்கு கல்வி கற்கின்ற சுமார் 257 அஹதிய்யாப் பாடாசலை மாணவர்களுக்காக பதின்மூன்றாவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட இப்தார் நிகழ்வு எதிர்வரும் 2025.03.15ஆந் திகதி சனிக்கிழமை, Maggona water’s Meet Reception Hall இல் இடம் பெறவுள்ளது.
இந்நிகழ்வின் விசேட அதிதியாக , Hassim Omar Foundation நிறுவனத்தின் தலைவர் Al-Haj Hassim Omer அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளதோடு ,இந்நிகழ்விற்கு அஹதிய்யாப் பாடசாலையின் அதிபர் Al-Haj I.M.M. Uwais அவர்கள் தலைமை தாங்குகின்றார்.
இந்நிகழ்வில் அதிதிகளாக water’s Meet Reception Hall உரிமையாளர்களான Al-Haj M.T.M. Haris, AL-Haj M.Dhahlan. Al-haj M.A.M. Ishaq , Al-Haj M. Hisham ஆகியோர் மற்றும் அல்-ஹஸனியா ம.வி. அதிபர் ஜனாப் Mohamed Ifthiqar களுத்துறை மாவட்ட அஹதிய்யா சம்மேளனத் தலைவர் Al-Haj M.H.M. Uwain, செயலாளர் Al-Haj M.S.M. Hisham மற்றும் இந்திரிலிகொடை பிரதேசத்தின் கிராம சேவை அதிகாரி E.H.D. Nipuni Jayakanthi ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
தகவல்: திருமதி ஜிப்ரியா இப்றாஹிம்செயலாளர் – மக்கொனை அஹதியா பாடசாலை