ராஜபக்ஷ குடும்பம் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தேர்தல்கள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சுமத்தியுள்ள குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு முன்னாள் அமைச்சர் உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அநுர குமார திசாநாயக்க வெளியிட்ட கருத்து ஒன்றை தமது எக்ஸ் (X) தளத்தில் காணொளியாகப் பதிவேற்றி அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவும் அவரது குழுவினரும் பல ஆண்டுகளாக நாங்கள் உகண்டாவிலும் பல்வேறு நாடுகளிலும் பில்லியன் கணக்கான டொலர்களை பதுக்கி வைத்துள்ளோம் என்று குற்றம் சுமத்தி வருகின்றனர்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டிய நேரம் இது” என்று முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *