
தபால் மூலம் வாக்களிக்க விரும்பும் அரசு அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் தபால் வாக்குச் அத்தாட்சிப்படுத்தும் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிவிப்பில், மார்ச் 12 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் முடிவடையவிருந்த உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான திகதி, தபாலில் ஏற்படக்கூடிய தாமதங்களையும் ஆணைக்குழுவுக்கும் விடுக்கப்பட்ட கோரிக்கைகளையும் கவனத்தில் கொண்டு, மார்ச் 17 ஆம் திகதி நள்ளிரவு வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, விண்ணப்பங்களை 17 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குள் உரிய மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு கிடைக்கப்பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறும் போது ஏற்படக்கூடிய தாமதங்களைத் தவிர்க்க, மார்ச் 13 முதல் 17 ஆம் திகதி வரை பூர்த்தி செய்யப்பட்ட தபால் வாக்கு விண்ணப்பங்களை தபாலுக்கு ஒப்படைப்பதைத் தவிர்த்து அவற்றை ஒவ்வொரு மாவட்ட வாரியாகப் பிரித்து, தனித்தனி உறைகளில் இட்டு, அத்தாட்சிப்படுத்தும் அலுவலர் அலுவலகம் அமைந்துள்ள மாவட்டத்தில் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு நேரில் சென்று ஒப்படைக்க வேண்டும் என்றும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.