
கொச்சிக்கடை, பலகத்துறை பகுதியில் கைவிடப்பட்ட நிலத்திலிருந்து நேற்று (20) ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக கொச்சிக்கடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்துள்ளதாகவும் கொச்சிக்கடையைச் சேர்ந்த 30 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கொச்சிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்