
திருத்தப் பணிகள் காரணமாக நாளை மறுதினம் (27) நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளை மறுநாள் காலை 8.30 மணியிலிருந்து 5 மணி வரை 8 1/2 மணி நேரம் நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
இதேபோல், பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க/சீதுவ நகர சபைப் பகுதிகள் மற்றும் களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா-எல, கந்தானை, மினுவங்கொடை பிரதேச சபைப் பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபைப் பகுதியின் ஒரு பகுதியிலும் நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.