
கரந்தெனிய, திவியகஹவெல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கரந்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட தகராறின் விளைவாகவே இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொலைச் செய்த நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதோடு, அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.