
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கடந்த 3 ஆம் திகதி முதல் இதுவரை 168 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 132 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
தாக்குதல்கள் உள்ளிட்ட ஏனைய சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 79 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட நபர்களில் இந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் 18 வேட்பாளர்களும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.