
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சாவடிகளைத் தயார்படுத்தும் பணிகள் இன்று (5) காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நாளை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை 13,759 வாக்குச் சாவடிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் வாக்குச் சாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை நடைபெறும் தேர்தலுக்காக 49 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் 257 சுயேட்சைக் குழுக்களைச் சேர்ந்த 75,589 வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.