
கொழும்பு மாநகர சபை மேயர் தெரிவின்போது ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்திருக்கிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் 13 உறுப்பினர்கள் கொழும்பு மாநகர சபைக்கு தெரிவாகியுள்ளனர். தேசிய மக்கள் சக்தி சார்பில் 48 பேரும் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் 29 பேரும் தெரிவாகியுள்ளனர் .
இதனிடையே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 5 உறுப்பினர்களையும் , ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 4 உறுப்பினர்களையும் பெற்றுள்ள அதேசமயம் அவற்றுடன் சுயேச்சை குழுக்களுடன் 69 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மேயர் ஒருவரை தெரிவு செய்ய நடவடிக்கைகளை எடுத்துவரும் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவை வழங்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்திருக்கிறது.
இது தொடர்பில் மேலும் பல சுயேச்சை குழுக்களுடன் ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்தும் பேச்சுக்களை நடத்தி வருவதாக அறியமுடிகின்றது.