
வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் நால்வரை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
துபாயிலிருந்து விமானம் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த வெல்லம்பிட்டி, தெமட்டகொட, பம்பலப்பிட்டி மற்றும் கொஸ்வத்த, கொழும்பு ஆகிய இடங்களைச் சேர்ந்த 25 முதல் 30 வயதுக்குட்பட்ட நான்கு இளைஞர்களே சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் விமான நிலையத்தை விட்டு தனித்தனியாக வெளியேற முயன்ற போதிலும், அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட சிகரெட்டுகளின் பெறுமதி பில்லியன் ரூபா எனவும் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுக்களில் இதுவே மிகப்பெரிய பறிமுதல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.