எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக இதுவரையில் 293 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதுடன், 88 குழுக்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளது.
செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதி முதல் பொதுத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்த முடியும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்த நிலையில், இதுவரை 293 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் 19 சுயேச்சைக் குழுக்களும், கம்பஹா மாவட்டத்தில் 14, களுத்துறை மாவட்டத்தில் 9, கண்டி மாவட்டத்தில் 8, மாத்தளை மாவட்டத்தில் 5, நுவரெலியா மாவட்டத்தில் 14, காலி மாவட்டத்தில் 4, மாத்தறை மாவட்டத்தில் 8, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 9, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 27, வன்னி மாவட்டத்தில் 28, மட்டக்களப்பு மாவட்டத்தில் 29, திகாமடுல்ல மாவட்டத்தில் 42, திருகோணமலை மாவட்டத்தில் 19, குருணாகல் மாட்டத்தில் 8, புத்தளம் மாவட்டத்தில் 18, அநுராதபுரம் மாவட்டத்தில் 8, பொலன்னறுவை மாவட்டத்தில் 2, பதுளை மாவட்டத்தில் 6, மொனராகலை மாவட்டத்தில் 4, இரத்தினபுரி மாவட்டத்தில் 7, கேகாலை மாவட்டத்தில் 5 சுயேச்சைக் குழுக்களுமாக மொத்தம் 293 குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில் வடக்குக் கிழக்கு மாவட்டத்திலேயே இதுவரை அதிகளவான சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் 22 தேர்தல் மாவட்டங்களிலும் அதிக சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்திய மாவட்டங்களாகவும் வடக்கு, கிழக்கு காணப்படுகின்றது.
மேலும் இதுவரை 46 அரசியற் கட்சிகளும் 42 சுயேச்சைக் குழுக்களுமாக மொத்தம் 88 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
கொழும்பு மாவட்டத்தில் 4, கம்பஹா மாவட்டத்தில் 5, களுத்துறை மாவட்டத்தில் 3, கண்டி மாவட்டத்தில் 2, நுவரெலியா மாவட்டத்தில் 4, மாத்தளை 1, காலி மாவட்டத்தில் 2, மாத்தறை மாவட்டத்தில் 3, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 3, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 12, வன்னி மாவட்டத்தில் 6, மட்டக்களப்பு மாவட்டத்தில் 10, திகாமடுல்ல மாவட்டத்தில் 4, திருகோணமலை மாவட்டத்தில் 8, புத்தளம் மாவட்டத்தில் 5, அனுராதபுர மாவட்டத்தில் 1, பொலன்னறுவை மாவட்டத்தில் 2, மொனராகலை மாவட்டத்தில் 4, இரத்தினபுரி மாவட்டத்தில் 4, கேகாலை மாவட்டத்தில் 3 என்ற அடிப்படையில் மொத்தம் 88 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.