Author: admin

முன்னாள் அமைச்சர்கள் வசித்த அரச வீடுகள் மற்றும் பங்களாக்களை உடன் மீள ஒப்படைக்க உத்தரவு

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அந்தந்த அமைச்சு பதவிகளை வகித்த சந்தர்ப்பத்தில் பயன்படுத்திய அனைத்து அரசாங்க வீடு மற்றும் பங்களாக்களை உடனடியாக மீள ஒப்படைக்குமாறு அரச பொது நிர்வாக அமைச்சு எழுத்து மூலம் அறிவித்துள்ளது. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க…

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் – முன்னாள் எம்.பி. விக்கினேஸ்வரன்

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை எனவும் இளைஞர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்க முடிவு செய்துள்தாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் இன்றையதினம் (27) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, எமது கட்சியான தமிழ்…

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

நாவுல, அம்பன, எரிஸ்டன் வீதி பகுதியில் நேற்று பிற்பகல் பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கொங்கஹவெல பிரதேசத்தை சேர்ந்த 55 வயதானவர் என தெரியவந்துள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக்…

சதுப்பு நிலத்தில் மனித எலும்புகள் கண்டுபிடிப்பு

நவகமுவ, ரணால பிரதேசத்தில் உள்ள சதுப்பு நிலத்தில் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர். 119 அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் குழுவொன்று நவகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரணால, நவகமுவ என்ற முகவரிக்கு…

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் மெய்பாதுகாவலர்களை திரும்பப் பெற ஜனாதிபதி பணிப்பு

முன்னாள் சபாநாயகர், பிரதி சபாநாகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் மெய் பாதுகாவல்கள் தவிர, இதர முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நியமிக்கப்பட்டிருந்த மெய்பாதுகாவலர்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் திரும்பப் பெற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

புதிய அரசாங்கத்துக்கு பூரண ஆதரவை வழங்குவதாக ஜப்பான் அரசு தெரிவிப்பு

இலங்கையில் தற்போது பாதியில் நிறுத்தப்பட்டுள்ள 11 வேலைத்திட்டங்களை ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடன் ஆரம்பிக்கவும், புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு பூரண ஆதரவை வழங்கவும் ஜப்பான் அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

புதிய ஜனாதிபதியின் தொடரும் அதிரடி உத்தரவுகள்!!

ஜனாதிபதி மாவத்தை வீதி மற்றும் பரோன் ஜயதிலக்க மாவத்தை வீதிகளை இன்று முதல் திறக்குமாறு ஜனாதிபதி அனுர திஸாநாயக்க பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

SJB முக்கிய பதவிகளுக்கு இம்தியாஸ் பாக்கிர் மற்றும் கபீர் ஹாஷிம்

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி ஆகியவற்றின் பிரதான பதவி நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி புதியவர்களை அப்பதவிகளுக்கு நியமிக்க எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச இன்று(27) நடவடிக்கை எடுத்தார். இதன் பிரகாரம், 2024…

பாடசாலை நிகழ்வுகள் – பிரதமர் விடுத்த அதிரடி பணிப்பு

பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைத்து வருவதை உடனடியாக நிறுத்துமாறு கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆலோசனை வழங்கியுள்ளார். கல்வி அமைச்சின் அனைத்து திணைக்கள அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் குறிப்பிட்டுள்ளார். குறித்த கலந்துரையாடலில் பிரதமர் மேலும்…

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் இராஜினாமா

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் சிலோன் பெட்ரோலியம் சேமிப்பு முனையங்கள் லிமிடெட் (CPSTL) ஆகியவற்றின் தலைவர் பதவியில் இருந்து சாலிய விக்ரமசூரிய இராஜினாமா செய்துள்ளார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளரிடம் சமர்ப்பித்துள்ளார். எரிசக்தி…