இம்மாதத்திற்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை எதிர்பார்த்ததை விட குறைவாகவே உள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ, விசா வழங்கல் தொடர்பான பிரச்சினைகளே இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கவுள்ள 39 நாடுகளின் பிரஜைகளுக்கான விசா இல்லாத பயண வாய்ப்புகள், சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க உதவும் என்று தலைவர் பெர்னாண்டோ நம்பிக்கை தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டிற்கான 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் இலக்கை அடைய இந்த முயற்சி உதவும் என்று அவர் நம்பிக்கையாக தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 1 முதல் 17 வரை, மொத்தம் 70,678 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.