கண்டி பிரதேசத்தில் வைத்து இன்று (31) கைதுசெய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மிரிஹானை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நுகேகொடை, மிரிஹானையிலுள்ள அவரின் மனைவியின் இல்லத்திலி ருந்து வாகன இலக்கத்தகடு இல்லாத வாகனமொன்று கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் லொஹான் ரத்வத்த இன்று கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த வாகனம் கடந்த 26 ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிடுள்ளனர்